What is Merchant Banking and Financial Services
Merchant Banking
அமெரிக்காவில் இவரது பனி சேமிப்புகளைத் திரட்டி வணிக நிறுவங்களுக்கு திருப்பிவிடும் பணியுடன் தொடர்புடையதாக உள்ளது. இம்முன்னுரையுடன் இப்பொழுது நாம் இந்தியாவில் இவர்களது, வளர்ச்சி, முக்கியத்துவம், தகுதிகள், வகைகள், நடத்தை விதி, பணிகள் ஆகியவற்றை பற்றிப் பார்க்கலாம்.
இலண்டனில் இச்சொற்றொடரானது வணிகர் வங்கியியல் மற்றும் ஈடுகளாகக் கழகத்தின் உருபிக்கினராக இருந்து கலந்தாய்வு குத்தைகையிடல், பட்டியல் சேவைகள், சொத்து மேலாண்மை, யூரோ கடன், கடன் வணிக மறக்க கூட்டுப்பணிகள் போன்ற பணிகளை நிறைவேற்றுபவரே வணிகர் வாங்கியராகப கருதப்படுகிறார்.
வணிகர் வங்கி பொருளும் : Merchant banking and financial services
வணிகர் வங்கியின் முக்கியமான பனி பொது வெளியீடுகள் மேலாண்மை ஆகும். இவை முயற்சிகள், கம்பெனிகளைத் தொடங்கி வைத்தல், புதிய திட்டங்களைத் தயாரித்தல், திட்டமிடுதல், நிதிநிலை, நிர்வாகம் மற்றும் அமைப்புத துறைகள் தொடர்பான மற்றும் அறிவுரைகளை கழக நிறுவங்களுக்கு அசைகின்றன. மேலும், புனர் நிர்மாணம், சொத்துக்களின் மறு மதிப்பீடு, ஒன்றிணைப்புக்கள், கம்பெனிகளை எடுத்துக்கொள்தல், வாங்குதல் போன்ற பிற பணிகளையும் இவங்கிகள் மேற்கொள்கின்றன.
வணிகர் வங்கி இலக்கணமும் : Merchant banking material services
செபி வணிகர் வாக்கியர் விதிகள்,1992 ஆனது. வணிகர் வங்கியர் என்ற சொற்றொடருக்கு பின்வருமாறு இலக்கணம் வரைகின்றது.
ஈடுகளை விற்றல்,வாங்குதல் அல்லது அவற்றில் பங்களிப்புச் செய்தல் மேலாளர், அறிவுரையாளர் மற்றும் ஆலோசகராக பணிபுரிவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதன் மூலம் வெளியீட்டு மேலாண்மை வணிகத்தில் ஈடுபடும் நபர் அல்லது அவ்வெளியீட்டு மேலாண்மை தொடர்பான கழக ஆலோசனைப் பணியில் ஈடுபடும் நபரே வணிகர் வங்கியர் ஆவார்.
வெற்றிவாய்ப்பு மிக்க வணிகர் வங்கியர் ஒருவருக்கான தகுதிகள் :
வெற்றிவாய்ப்பு மிக்க வணிகர் வங்கியர் ஒருவர் கொண்டிருக்க வேண்டிய தகுதிகளாக நாம் பின்வருவனவற்றைக் காணலாம்.
1. ஆய்வு செய்யும் ஆற்றல் : Merchant banking
திட்டம் ஒன்றின் உருவாக்கத்துடன் தொடர்புடைய தொழில்நுட்பம், நிதி மற்றும் பொருளாதாரத்தின் பல்வேறு அம்சங்களையும் ஆய்வு செய்யும் திறன் உடையவராக வணிகர் வங்கியர் அமைதல் வேண்டும்.
2. ஒற்றுமை மற்றும் உயர்ந்தளவு அலுவலசார்ந்த தர அளவுகள் : Merchant banking
தற்போதைய நிலைமையில் வணிகர் வங்கியின் வெற்றிக்கு ஒற்றுமை மற்றும் உயர்ந்தளவு அலுவலசார்ந்த தர அளவுகளை நிர்வகித்தல் ஆகிய இரண்டுமே இன்றியமையாத முன் நிபந்தனைகளாக அமைகின்றன எனலாம்.
3. உறவுகளை உருவாக்கும் ஆற்றல் : Merchant banking meaning
வணிகர் வாங்கியானவர் தரைக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் சிறந்த உறவுமுறையை உருவாக்கும் ஆற்றலை உடையவராகவும் தனக்குத் தரப்பட்டுள்ள திட்டத்தில் முழுமையான ஈடுபாட்டைக் கொண்டிருத்தல் போன்ற ஆற்றலை உடையவராகவும் அமைதல் வேண்டும்.
4. சில அம்சங்கள் தொடர்பான அறிவு :
மூலதனச் சந்தைகளின் பல்வேறு அம்சங்கள் பங்கு மாற்றகத்தின் போக்குகள் முதலீடு செய்யும் தன்மை, நாட்டின் பொருளாதார மற்றும் தொழில் நுட்பத்தின் சுற்றுச்சூழல் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் போன்றவற்றின் அறிவு வணிகர் வாங்கியருக்கு இன்றியமையாதது ஆகும்.
5. கண்டுபிடிப்பு சார்ந்த அணுகுமுறை :
மாறிக்கொண்டே இருக்கின்ற முதலீட்டாளர்களை திருப்திப்படுத்தும் விதத்தில் மூலதனச் சந்தைக் கருவிகளை உருவாக்கும் வகையில் கண்டுபிடிப்பு சார்ந்த அணுகுமுறையைக் கொண்டவராகவும் வணிகர் வங்கியர் இருத்தல் வேண்டும்.
வணிகர் வங்கிகளின் தேவை : Merchant banking functions
- இந்தியாவில் வணிகர் வங்கிகளுக்கான தேவையை நாம் பின்வரும் காரணங்களின் மூலம் உணரலாம்.
- வளர்ந்து வரும் தொழில்மயமாக்கம்
- அயல்நாட்டு கூட்டுத் திட்டங்களுக்கு வாய்ப்பு அதிகரித்தல்.
- சிறிய மற்றும் நடுத்தரத் தொழிலதிபர்களை ஊக்குவிப்பதற்கான தேவை.
- தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சியுள்ள தொழில்களின் அதிகரிப்பு.
- அரசின் சட்டத்திட்டங்கள், விதிகள் மற்றும் நடைமுறைகளில் உள்ள சிக்கலான தன்மையின் அதிகரிப்பு.
- பொதுமக்களின் சேமிப்பை சேகரிக்கக்கூடிய புதிய வெளியீடுகள் சந்தையை அபிவிருத்தி செய்தல்.
வணிகர் வங்கியின் முக்கியத்துவம் : Merchant banking and financial services
- வணிகமும் தொழிலும் விரிவடைந்து கொண்டே வருகின்றன. இதனால் நிதியின் தேவை அதிகரித்த வண்ணமே இருக்கிறது.
- ஆனால் நிதியின் அளிப்பு, அதன் தேவைக்கேற்றபடிஅதிகரிக்கவில்லை.
- நிதியின் தேவைக்கும் அளிப்பிற்கும் இடையே பரந்த இடைவெளியிருந்து கொண்டே இருக்கிறது. இதுவே இந்தியாவின் வணிகர் வங்கியியல் வளர்ச்சியுற்றதன் காரணமாகும்.
- கழக நிறுவனங்கள் தங்களின்நீண்டகால நிதித்தேவைகளை பங்குச் சந்தையில் பங்குகளையும், கடன் பாத்திரங்களையும் வெளியிடுவதன் மூலம்தான் நிறைவேற்றிக்கொள்கின்றன.
- நிதி நிறுவங்களிடமிருந்து நடுதரத் தேவைகளுக்குரிய நிதியை பெறுகின்றன. நிதித்தேவையின் வளர்ச்சியானது பங்குச் சந்தையில் வளர்ச்சியை ஏற்படுத்தின.
- பங்குச்சந்தையின் இவ்வித வளர்ச்சியே வணிகர் வங்கிகள், பங்குத் தரகர்கள், நிதி ஆலோசனை நிறுவங்கள் போன்றவைகளையும் வணிகர் வங்கியியல் துறையில் நுழைய உற்சாகப்படுத்தின.

Comments
Post a Comment
Ask me anything here...