Filling up of Vacancies and Recruitment Plan - Dte Lr dtd 15-07-2022









அன்பார்ந்த தோழர்களே !! தோழியர்களே!! 
         அனைத்து கேடர்களிலும் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என  NFPE உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் தொடர்ச்சியாக வைத்த கோரிக்கைகளின் காரணமாக அஞ்சல் துறையில் உள்ள அனைத்து காலியிடங்களையும் உடனடியாக நிரப்புவதற்கு மத்திய அரசின் DOPT அஞ்சல் துறைக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அஞ்சல் இயக்குனரகம் அனைத்து Circleகளுக்கும் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அந்த உத்தரவில் "டிசம்பர் 2023 வரையிலான காலியிடங்கள் உட்பட அனைத்து காலி பணியிடங்களையும்  நிரப்ப அரசு முடிவு செய்துள்ளதாகவும். Circles வழங்கிய தகவலின் அடிப்படையில், 87475 காலியிடங்கள் (31.12.2021 வரை) உள்ளதாக DOPT க்கு தெரிவிக்கப்பட்டதாகவும். 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் பணி ஓய்வு போன்றவற்றால் ஏற்படும் காலிப் பணியிடங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு,  2023 வரை குறைந்தபட்சம் 97104 காலிபணியிடங்களை அஞ்சல் துறை நிரப்ப வேண்டும் எனவும் எனவே ஒவ்வொரு கேடருக்கான காலியிடங்களை  சரியாகக் கணக்கிடப்படுவதையும், அனைத்து காலியிடங்களும் உரிய முறைகளில் தேர்வு விதிகளின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும் என அனைத்து Postal Circle களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்  Feeder கேடரில் இருந்து உயர் கேடருக்கு பதவி உயர்வு காரணமாக Chain Vacancies Feeder கேடருக்கான காலியிடத்தில் சேர்க்கப்பட்ட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. 
Postal Assistant /Sorting Assistant 
                 Postal Assistant/Sorting Assistant Vacancies LDCE மற்றும் SSC மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. PA/SA காலியிடங்களுக்கான LDCE அறிவிப்பை அனைத்துCircle களும்  ஏற்கனவே வெளியிட்டுள்ளதால், காலியிடங்களை சரியாகக் கணக்கிடுவது மிகவும் அவசியம்‌. காலியிடத்தைக் கணக்கிடுவதற்கான நிலையான நடைமுறைகளையைத் தவிர, PA/SA காலியிடத்தைக் கணக்கிடும்போது பின்வரும் வழிகாட்டுதல்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 
"PA/LSG/HSG-II/HSG-I இன் கேடர் மறுசீரமைப்புக்கான ஆணைகள் 2016 மற்றும் 2017 இல் வெளியிடப்பட்டன, அதன் படி LSG/HSG-II/HSG-I/ HSG- இல் கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. உருவாக்கப்பட்ட பதவிகளுக்கு சமமான எழுத்தர் பதவிகள் ஒழிக்கப்பட்டன. இருப்பினும், HSG-I மற்றும் HSG-II பணியிடங்கள்  தகுதியான ஊழியர்கள் இல்லாததால் நிரப்பப்படவில்லை. இது தொடர்பாக, அஞ்சல் இயக்குனரகம்  05.12.2018 மற்றும் 03.02.2022 தேதியிட்ட உத்தரவு மூலம் பதவி உயர்வு பெற்ற ஊழியர்கள் பொறுப்பேற்ற பிறகே உயர்நிலை பதவிகள் HSG II and HSG-I உருவாகும் என தெரிவித்தது. எனவே காலியிடங்கள் கணக்கீட்டின்போது இதனை அனைத்து Circlesகளும் கவனத்தில் கொள்ள வேண்டும் என அஞ்சல் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 
 "LSG  பதவி உயர்வுக்கான DPC எந்த தாமதமும் இன்றி முடிக்கப்பட வேண்டும் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் Postal Assistant /Sorting Assistant காலியிடங்கள் 2022 ஆம் ஆண்டிற்கான PA/SA காலியிடத்தில் சேர்க்கப்பட வேண்டும். LSG பதவி உயர்வு  பெற்ற ஊழியர்கள் பலர் தங்கள் பதவி உயர்வை மறுதலிப்பதால் அதனை கருத்தில் கொண்டு  மறுதலிக்கப்பட்ட இடங்களுக்கான பதவி உயர்வு பெறுபவர்களின் துணை பட்டியலை முன்கூட்டியே தயாரித்து வைக்க வேண்டும். கால விரயத்தை தவிர்க்கும் பொருட்டு பதவி உயர்வு பெற்ற ஊழியர்கள் தங்கள் பதவி உயர்வை ஏற்றுக் கொள்வது அல்லது மறுதலிப்பது குறித்து ஒன்று அல்லது இரண்டு நாட்களில் முடிவெடுத்து அதற்கான பிரதிநிதித்துவத்தை அளிக்க அறிவுறுத்தப்பட வேண்டும். 
c) நிர்வாக தீர்ப்பாயம் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் நடந்து கொண்டிருக்கும் வழக்குகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களைத் தவிர  அனைத்து Postal Assistant /Sorting Assistant காலியிடங்களும் 2022க்கான காலியிடங்களுடன் சேர்க்கப்பட வேண்டும். 
MTS/Postman/MailGuard 
 MTS, Postman மற்றும் MailGuard கேடரின் அனைத்து காலி பணியிடங்களுக்கும் பணிமூப்பு அல்லது Circle மூலம் நடத்தப்படும் LDCE/DR தேர்வு மூலம் பூர்த்தி செய்யப்பட வேண்டும். MTS, Postman மற்றும் MailGuard பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிடும் பணியில் Circles இருப்பதால், காலியிடங்களை சரியாகக் கணக்கிடுவது அவசியம். காலியிடத்தைக் கணக்கிடுவதற்கான நிலையான நடைமுறையைத் தவிர. MTS, Postman மற்றும் MailGuard  காலியிடங்களைக் கணக்கிடும் போது பின்வரும் வழிகாட்டுதல்களை கவனத்தில் கொள்ள வேண்டும். 

 31.03.2018  முன்னர் Direct Recruitment உள்ளிட்டவைகள் மூலம் பூர்த்தி செய்யப்படாத சில காலியிடங்கள் உள்ளன. இந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் விதம் குறித்து  Circles இயக்குனரகத்திற்கு தெரிவிக்கலாம்.

 ALL Credit of this post going to https://sapost.blogspot.com

Comments

Popular posts from this blog

Gove confirms mandatory housebuilding targets for councils will be abolished in face of Tory rebellion – UK politics live

Kotak Mahindra Bank Recruitment 2022 Released for Graduate Candidates And Apply Online