Revision of Department of Posts (Postman/ Mail Guard) Recruitment Rules 2022

Download PDF ( 10 Pages)

Translated In Tamil

Department of Posts Postmen &MailGuard Recruitment Draft Rules 2022 ஐ அஞ்சல் இயக்குனரகம் சுற்றுக்கு விட்டுள்ளது. இது சம்பந்தமான கருத்தினை 14.12.2022 க்குள் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

POSTMEN  RECRUITMENT DRAFT RULES 

******************

25%  Postman காலியிடங்கள் :-

  காலிபணியிடங்களுக்கான ஆண்டின்  ஜனவரி மாதம் 1ந்தேதி குறைந்த பட்சம்  6 ஆண்டுகள பணி முடித்த அந்தந்த அஞ்சல் கோட்ட MTS ஊழியர்கள் மூலம் பணிமூப்பு (Seniority)அடிப்படையில் பூர்த்த செய்யப்படும். 

இதில் பூர்த்திசெய்யப்படாத  இடங்கள் 50% GDS ஊழியர்களின் போட்டி தேர்வுகளுக்கான காலியிடங்களுடன் சேர்க்கப்படும். 

******************

25% Postman காலியிடங்கள் :-

    காலிபணியிடங்களுக்கான ஆண்டின் ஜனவரி மாதம் 1ந்தேதி குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் பணிமுடித்த மாநில அளவில் உள்ள MTS ஊழியர்கள் மற்றும் காலிபணியிடங்களுக்கான ஆண்டின் ஜனவரி மாதம் 1ந்தேதி  GDS பணிகாலத்தையும் சேர்த்து 8 ஆண்டுகள் பணிமுடித்த மாநில அளவில் உள்ள MTS ஊழியர்கள் மூலம் போட்டித்தேர்வின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும். 

இதில் பூர்த்திசெய்யப்படாத  இடங்கள் 50% GDS ஊழியர்களின் போட்டி தேர்வுகளுக்கான காலியிடங்களுடன் சேர்க்கப்படும்.

******************

50% Postman காலியிடங்கள் :-

                         காலிபணியிடங்களுக்கான ஆண்டின் ஜனவரி மாதம் 1ந்தேதி குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிமுடித்த மாநில அளவில் உள்ள GDS ஊழியர்கள் மூலம் போட்டி தேர்வின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும்.  GDS ஊழியர்கள் தேர்வு எழுதுவதற்கான அதிகபட்ச வயது வரம்பு 50 (OBC பிரிவிற்கு 3 ஆண்டுகளும் SC/ST பிரிவிற்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.

GDS ஊழியர்கள் அந்தந்த மாநில மொழிகளை‌ தெரிந்திருக்க/அறிவு பெற்று இருக்க‌ வேண்டும்.

GDS ஊழியர்களுக்கு Local Language Test விருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கணினியில் பணியாற்றும் அறிவு பெற்றிருக்க வேண்டும்.

இருசக்கர வாகன உரிமம் அல்லது இலகுரக வாகன உரிமம்  பெற்றிருக்க வேண்டும். ஆனால் பணி நியமனத்தின் போது இரு சக்கர வாகன உரிமம் அல்லது இலகுரக வாகன உரிமம் வைத்திருக்க தேவையில்லை. பணி நியமனம் செய்யப்பட்டதிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் இரு சக்கர வாகன உரிமம் அல்லது இலகு ரக வாகன உரிமம் பெற வேண்டும். அதுவரை ஆண்டு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்படும் . இருசக்கர வாகன உரிமம் அல்லது இலக்குரக வாகன உரிமம் பெற்ற பின்னரே ஆண்டு ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்படும். ஆனால் ஆண்டு ஊதிய உயர்வுக்கான நிலுவைத் தொகை எதுவும் வழங்கப்படாது.(மாற்றுத்திறனாளிகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்)

இதன்பிறகும் பூர்த்தி செய்யபடாத இடங்கள் நேரடி தேர்வு(Direct Recruitment ) முறை மூலம் நிரப்பப்படும்.

MAILGUARD  RECRUITMENT RULES 

******************

25% Mailguard காலியிடங்கள் 

             காலிபணியிடங்களுக்கான ஆண்டின்  ஜனவரி மாதம் 1ந்தேதி குறைந்த பட்சம்  6 ஆண்டுகள் பணி முடித்த அந்தந்த RMS கோட்டத்தில் உள்ள MTS ஊழியர்கள் மூலம் பணிமூப்பு (Seniority)அடிப்படையில் பூர்த்த செய்யப்படும். இதில் பூர்த்திசெய்யப்படாத  இடங்கள்  50% GDS ஊழியர்களின் போட்டி தேர்வுகளுக்கான காலியிடங்களுடன் சேர்க்கப்படும். 

******************

50% Mailguard காலியிடங்கள் -

                  காலிபணியிடங்களுக்கான ஆண்டின் ஜனவரி மாதம் 1ந்தேதி குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் பணிமுடித்த மாநில அளவில் உள்ள MTS ஊழியர்கள் மற்றும் காலிபணியிடங்களுக்கான ஆண்டின் ஜனவரி மாதம் 1ந்தேதி  GDS பணிகாலத்தையும் சேர்த்து 8 ஆண்டுகள் பணிமுடித்த மாநில அளவில் உள்ள MTS ஊழியர்கள் மூலம் போட்டித்தேர்வின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும். 

இதில் பூர்த்திசெய்யப்படாத  இடங்கள் 50% GDS ஊழியர்களின் போட்டி தேர்வுகளுக்கான காலியிடங்களுடன் சேர்க்கப்படும்.

******************

25% Mailguard காலியிடங்கள் 

                          காலிபணியிடங்களுக்கான ஆண்டின் ஜனவரி மாதம் 1ந்தேதி குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிமுடித்த மாநில அளவில் உள்ள GDS ஊழியர்கள் மூலம் போட்டி தேர்வின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும்.  GDS ஊழியர்கள் தேர்வு எழுதுவதற்கான அதிகபட்ச வயது வரம்பு 50 (OBC பிரிவிற்கு 3 ஆண்டுகளும் SC/ST பிரிவிற்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.

 GDS ஊழியர்கள் அந்தந்த மாநில மொழிகளை‌ தெரிந்திருக்க/அறிவு பெற்று இருக்க‌ வேண்டும்.

GDS ஊழியர்களுக்கு Local Language Test விருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கணினியில் பணியாற்றும் அறிவு பெற்றிருக்க வேண்டும்.

இதன்பிறகும் பூர்த்தி செய்யபடாத Mailguard காலியிடங்கள் நேரடி தேர்வு(Direct Recruitment ) முறை மூலம் நிரப்பப்படும்.

******************

நேரடி நேரடி தபால்காரர்& மெயில்கார்டு (Direct Recruitment ) தேர்வுக்கான விதிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

 1.விண்ணப்பதாரர்கள்  விண்ணப்பங்கள் பெறப்படும்  கடைசித்தேதி அன்று 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

(இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகைகள் அளிக்கப்படும்.சில மாநிலங்களுக்கு  யூனியன் பிரதேசங்களுக்கும் வயதுவரம்பு நிர்ணய தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன.)

2. அங்கீகரிக்கப்பட்ட கல்வி  நிறுவனத்தில் (+2) பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.( இனி வினாத்தாள்  +2  தரத்திலான கேள்விகளுடன் தயாரிக்கப்படலாம்)

அந்தந்த மாநில Local Language இல்லாதவர்களும்  இனி Postman/Mailguard Direct Recruitment தேர்வினை  எழுதலாம்.  பணிநிமனத்துக்கு பின் Local Language Test ல் தேர்ச்சி பெற்றால் போதுமானது. GDS ஊழியர்களுக்கு Local Language Test விருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கணினியில் பணியாற்றும் அறிவு பெற்றிருக்க வேண்டும்.

இரண்டு ஆண்டுகள் திருப்திகரமான  பணிகாலம் இருப்பின் பணிநிரந்தர உத்தரவு வழங்கப்படும்.

பணிநிரந்தரம் /பதவி உயர்வு ஆகியவை DPC எனப்படும் DEPARTMENTAL PROMOTION COMMITTE ன் கூட்டத்தில் கலந்து பேசி முடிவு செய்யப்படும். DPC ல் சம்பந்தப்பட்ட கோட்ட தலைமை  அதிகாரி தலைவராக இருப்பார். இரண்டு GROUP B GAZETTED அதிகாரிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

 ALL Credit of this post going to https://sapost.blogspot.com

Comments

Popular posts from this blog

Gove confirms mandatory housebuilding targets for councils will be abolished in face of Tory rebellion – UK politics live

Kotak Mahindra Bank Recruitment 2022 Released for Graduate Candidates And Apply Online